காணுநர் எள்ளக் கலங்கித்
தலைவந்துஎன்
ஆண்எயில் முற்றி உடைத்துஉள் அழித்தரும்
மாண்இழை மாதராள் ஏஎர்எனக் காமனது
ஆணையால் வந்த படை;
காமக் கடும்பகையின் தோன்றினேற்கு ஏமம்
எழில்நுதல் ஈத்தஇம் மா;
அகைஎரி ஆனாதுஎன் ஆர்உயிர் எஞ்சும்
வகையினால் உள்ளம் சுடுதரும் மன்னோ;
முகைஏர் இலங்குஎயிற்று இன்னகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு;
அழல்மன்ற காம அருநோய்; நிழல்மன்ற
நேரிழை ஈத்தஇம் மா;
ஆங்கதை
அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம்
ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்
உள்ளிடப் பட்ட அரசனைப் பெயர்த்து அவர்
உயர்நிலை உலகம் உறீஇ யாங்குஎன்
துயர்நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே.
கலி. 139
எனவும்,
உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க,
முளைத்த முறுவலார்க்கு எல்லாம்-விளைத்த
பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும்;
முழங்கு புனலூரன் மூப்பு.
பு. வெ. பெ. 14
எனவும்,
அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்
பெருந்தோள் விறலி! பிணங்கல் - சுரும்போடு
அதிரும் புனலூரற்கு, ஆரமுதம் அன்றோ?
முதிரும் முலையாள் முயக்கு.
பு. வெ. பெ. 13
எனவும் வருவனவும், |