அகத்திணையியல்--நூற்பா எண் 219895

புர

    புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை
    அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்கண்
    செயல்நின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது,
    நயம்நின்ற பொருள்கெடப் புரிஅறு நரம்பினும்,
    பயனின்று மன்றம்ம காமம், இவள், மன்னும்
    ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்,
    முள்நுனை தோன்றாமை முறுவல்கொண்டு அடக்கித்தன்
    கண்ணினும் முகத்தினும் நகுபவள், பெண் இன்றி,
    யாவரும் தண்குரல் கேட்ப, நிரைவெண்பல்
    மீயுயர் தோன்ற நகாஅ, நக்காங்கே,
    பூஉயிர்த் தன்ன புகழ்சால் எழில்உண்கண்
    ஆயிதழ் மல்க அழும்.

    ஓஒ, அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்
    காண்பாம் கனங்குழை பண்பு;


என்று, எல்லீரும் என்செய்தீர்? என்னை நகுதிரோ?
    நல்ல நகாஅலீர் மன்கொலோ! யானுற்ற
    அல்லல் உறீஇயான் மாய மலர்மார்பு
    புல்லிப் புணரப் பெறின்;

எல்லாநீ, உற்றது எவனோ மற்றுஎன்றிரேல், எற்சிதை
    செய்தான் இவனென, உற்றது இதுவென,
    எய்த உரைக்கும் உரன்அகத்து உண்டாயின்,
    பைதல ஆகிப் பசக்குவ மன்னோ? என்
    நெய்தல் மலரன்ன கண்.

    கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
    நாடுவேன் கண்டனென் சிற்றிலுள், கண்டாங்கே
    ஆடையான் மூஉய் அகப்படுப்பேன், சூடிய,
    காணான் திரிதருங் கொல்லோ? மணிமிடற்று
    மாண்மலர்க் கொன்றை யவன்,