அகத்திணையியல்--நூற்பா எண் 219897

வல

வலிதின் உயிர்காவாத் தூங்கி, ஆங்கென்னை
நலியும் விழுமம் இரண்டு. எனப்பாடி
இனைந்துநொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்;
எல்லையும் இரவும் கழிந்தன என்றெண்ணி, எல்லிரா
நல்கிய கேள்வன் இவன்மன்ற! மெல்ல
மணியுள் பரந்த நீர்போலத் துணிவாம்;
கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளித்து, நலம்பெற்றாள்;
நல்லெழில் மார்பனைச் சார்ந்து.

கலி. 142

எனவும்,

     ஏஏ! இஃதொத்தன் நாணிலன்; தன்னொடு
     மேவேம்என் பாரையும் மேவினன் கைப்பற்றும்
     மேவினும் மேவாக் கடையும், அஃதெல்லா!
     நீஅறிதி; யான்அஃதறிகல்லேன்; பூஅமன்ற
     மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய்! நின்னையான்
     புல்லினி தாகலின் புல்லினென்; எல்லா!
     தமக்கினி தென்று வலிதின் பிறர்க்கு இன்னா
     செய்வது நன் றாமோ மற்று?

     சுடர்த்தொடீஇ,
     போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்,
     வேட்டார்க்கு இனிதாயின் அல்லது, நீர்க்கினிதென்று
     உண்பவோ நீர்உண் பவர்?

     செய்வ தறிகல்லேன்; யாதுசெய் வேன்கொலோ?
     ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா;
     மையில் மதியின் விளங்கு முகத்தாரை
     வௌவிக் கொளலும் அறன்எனக் கண்டன்று.

113