அறனும் அதுகண்டற் றாயின்,
திறனின்றிக்
கூறும்சொல் கேளான் நலிதரும், பண்டுநாம்
வேறல்லம் என்பதொன்று உண்டால்; அவனொடு
மாறுண்டோ நெஞ்சே நமக்கு?
கலி. 42
எனவும் ஏறிய மடல்திறம் முதலிய நான்கற்கும் முறையே காண்க.
‘செப்பிய நான்கு’ எனவே செப்பாதனவும் அத்துணைக் கந்தருவமாகக்
கூறுகின்ற ‘பின்னர் நான்கும் பெருந்திணைபெறும்’ என்ற பெருந்திணை
நான்கு உள என்று கொள்க. ‘குறிப்பு’ என்றதனான் அந்நான்கும்
பெருந்திணைக்குச் சிறந்த என்றும் ஈண்டுக் கூறியன கைக்கிளைக்குச் சிறந்த
என்றும் கொள்க.
219
விளக்கம்
நூற்பா. தொ. பொ. 51.
உரைவிளக்கம் நச்சினார்க்கினியர் உரைத்தே.
இந்நூற்பாச் செய்தியை விடுத்து அகப்பொருள் விளக்க ஆசிரியர்.
‘அகன்றுழிக் கலங்கலும் புகன்றமடல் கூற்றும்
குறியிடை யீடும் தெளிவிடை விலங்கலும்
வெறிகோள் வகையும் விழைந்து உடன் போக்கும்
பூப்புஇயல் உரைத்தலும் பொய்ச்சூ ளுரையும்
தீர்ப்புஇல் ஊடலும் போக்கு அழுங்கு இயல்பும்
பாசறைப் புலம்பலும் பருவம்மாறு படுதலும்
வன்புறை எதிர்அழிந்து மொழிதலும் அன்புறு
மனைவியும் தானும் வனம் அடைந்து நோற்றலும்
பிறவும் அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய.’
243
‘மடல்ஏ றுதலொடு விடைதழாஅல்
என்றா
குற்றிசை தன்னொடு குறுங்கலி என்றா
சுரநடை தன்னொடு முதுபாலை என்றா |