களவுப் புணர்ச்சி நிகழும்
காலத்தே தலைவன் நண்பனுக்கு உதவி
செய்வதற்குப் போர்மேல் செல்லும் நிலை ஏற்படலும் கூடும். அக்காலை தன்
பிரிவுபற்றியோ வருகை பற்றியோ எதுவும் கூறாது தலைவன் தலைவியைப்
பிரிந்து பன்னாள் வெளியிடத்தில் தங்கியிருக்கும் நிலையும்
ஏற்படும்.
நிகழ்ந்ததை உணராத தலைவி தலைவன் பன்னாளும்
வாராததனால் தன்னை
அன்பின்றி மறந்துவிட்டான் என்று கருதத்
தொடங்கிவிடுவாள். அப்பொழுது
அவள் மனநிலைக்கண் பெண்மை
நலன்கள் மடங்கிவிடும். அவள்நிலையைத்
தொல்காப்பியனார்,
‘பொழுதுதலை வைத்த கையறு காலை
இறந்த போலக் கிளக்கும் கிளவி
மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு
அனைநாற் பொருட்கண் நிகழும் என்ப’
தொல். பொ. 206
என்ற நூற்பாவில் விளக்குவார். அத்தகைய தலைவி நிலையை விளக்கும்
பாடல் ‘புரிவுண்ட புணர்ச்சி’ என்பது.
‘புரிவுண்ட புணர்ச்சி’--
“களவுப் புணர்ச்சியிடை தலைவன் அருமை செய்து அயர்த்ததனாலே யாழை
மீட்டிக்கொண்டிருக்கும்போது அதன் நரம்பு அறுந்தாற்போன்ற
நிலை இவள்
மனத்தில் ஏற்பட்டதனால் இவள் பெண்மையை மறந்த
சிரித்தும் அழுதும்
கலங்குகிறாள் என்று என்னைப்பார்த்துச் சிரிக்கிறீர்களா!
என் தலைவன்
எனக்குக் கிடைத்த பின்பு நன்கு சிரியுங்கள்.
உன் துன்பம் என்னஎன்று கேட்கிறீர்களா? என் தலைவன் செய்ததை
வெளிப்படையாகக் கூறும் ஆற்றல் எனக்கு இருந்தால் என்கண்களில்
இப்படிப் பசலை பாயுமா?
‘கூடல் சுழி இழைத்தபோது என் சிற்றிலில் பிறையைக் கண்டேன்.
ஆடையால் மூடி அதைக் கைப்பற்றக் கருதி |