904இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

இங

இங்ஙனம் உள்ளக் கருத்தை மறைத்து முதலில் கூறி்ப்பின் உடன்படுதல்
பற்றி,

      ‘வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல்
      மரீஇய மருங்கின் உரித்துஎன மொழிப.’

தொல். பொ. 211

என்றார் தொல்காப்பியனார்.

                       ஒத்த நூற்பா

 

     முழுதும்--                                   தொல். பொ. 51

 

219

பாடப் படுவோர் இருவர்



582   பாட்டுடைத் தலைவன் கிளவித் தலைவன்எனப்
      பாட்டினுள் பாடப் படுவோர் இருவர்.


     இஃது அகப்பாட்டிற்கு உரியதோர் ஒழிபு கூறுகின்றது.
 
     (இ-ள்) பாட்டிற்கு உரிமை பூண்ட தலைவனும், கிளவிக்கு
உரிமைபூண்ட தலைவனும் என அகப்பொருள் பற்றிவரும் பாட்டினுள்
பாடப்படுவோர் இருவர் என்றவாறு.

220

விளக்கம்
 


     பாட்டுடைத் தலைவன்--புலவனைப் ஆதரித்துப் பாட்டு இயற்றச்செய்த
தஞ்சைவாணன் போல்வான்.

    கிளவித் தலைவன் -- இயற்பெயர் சுட்டப்படாது அகத்திணைக் கண்
வழங்கும் வெற்பன், காளை, நாடன், ஊரன் சேர்ப்பன் முதலிய பெயர்களால்
குறிக்கப்படுபவன்.

 

ஒத்த நூற்பா
 

       முழுதும்--                                     ந.அ. 245

220