அகத்திணையியல்--நூற்பா எண் 221905

சிறந்த தலைவன்


அவருள்,
593   உயர்ந்தோன் பாட்டுடை உரவோன் ஆகும்.

     இஃது அவருள் ஒருவற்கு உயர்ச்சி கூறுகின்றது.

     (இ-ள்) மேற்கூறிய இருவருள்ளும் உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவனாம் என்றவாறு.
     ‘கழித்துஉறை செறியா வாள்உடை எறுழ்தோள்
     இரவுத்துயில் மடிந்த தானை
     உரவுச்சின வேந்தன் பாசறை யேமே.’

அகநா. 24


என்றதனால் பாட்டுடைத்தலைவன் உயர்ந்தோனாதல் அறிக.
வேந்தன் பாண்டியன். பிறவும் அன்ன.

 221

விளக்கம்


‘கழித்துஉறை’--

     ‘கழித்தவாளை உறையில் செறித்து இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்
படைவீரரை உடைய வலிய சினம்மிக்க மன்னனுடைய பாசறைக்கண் யாம்
உளேம்.’

     கிளவித்தலைவன் அரசனுடைய படை வீரருள் ஒருவனாக இருந்து
பாசறைக்கண் புலம்பும் நிலையன் ஆதலின், பாட்டுடைத்தலைவனின் இவன்
இழிந்தவன் என்பதற்கு இஃது எடுத்துக்காட்டு.

     பாட்டுடைத்தலைவன் உலகில் நடமாடி வரலாற்றுக்கு உரியவன்.
கிளவித்தலைவன் புலவர் கற்பனை அளவில் இருப்பவன்.


ஒத்த நூற்பா
 

       முழுதும்--                                       ந. அ. 246

221

114