ஒத்த நூற்பா
முழுதும்--
ந. அ. 247
222
கிளவித்தலைவன் பெயர்
அவற்றுள்,
595 இயற்பெயர் கிளவித் தலைவற்கு இசையார்.
இஃது ஒன்றற்கு எய்தியது விலக்குகின்றது.
(இ-ள்) மேல் சொல்லப்பட்ட பெயருள் குரவரால் பெற்ற
பெயரினைக் கிளவித் தலைவற்குச்
சொல்லார் ஆசிரியர் என்றவாறு.
223
விளக்கம்
கிளவித்தலைவனது இயற்பெயர் கூறின் அப்பாடல் புறத்திணையது
ஆகுமே அன்றி அகத்திணையது ஆகாது.
ஒத்த நூற்பா
‘மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.’
தொல். பொ. 54
முழுதும்--
ந. அ. 248
223
பாடப்படுவோர் பெயர்
பாடலுள் அமையுமாறு
596 இருவரும் ஒருங்கே வருதலும் தனித்தனி
வருதலும் இருவரும் வாராது ஒழிதலும்
உரிய என்மனார் உணர்ந்திசி னோரே.
இஃது அத்தலைவர்க்கு ஆவதோர் இயல்பு கூறுகின்றது. |