(இ-ள்) மேல் சொல்லப்பட்ட
தலைமக்கள் இருவரும் கூடவருதலும்,
அவருள்
ஒருவரே வருதலும், அவ்விருவரும் வாராது ஒழிதலும் உரிய
என்று கூறுவர்
ஆசிரியர் என்றவாறு.
224
விளக்கம்
இதற்கு நம்பியகப்பொருளுரையுள் எடுத்துக்காட்டும்
உள.எடுத்துக்காட்டுக்கள்
பல முன்னர் வந்துள்ளமையின் ஈண்டுக்
கூறப்படவில்லை.
ஒத்த நூற்பா
முழுதும்--
ந. அ. 249
224
அகப்புறப்பாட்டின் இயல்
597 அகப்புறப் பாட்டும் இகப்பில அவையே.
இஃது எதிரது போற்றி இங்ஙனம் கூறிய இலக்கணம் புறப்பொருட்கும்
எய்துவிக்கின்றது, இதன்வழிக் கூறப்படுவது புறத்திணையியல் ஆகலின்.
(இ-ள்) அகப்பாட்டிற்குச் சொன்ன இலக்கணங்களைக் கடவாது
அகப்புறப்பாட்டும் என்றவாறு.
பொருந்துவ பொருந்தும் என்பார் ‘இகப்பில அவை’ என்றார்;
என்னை?
அனைத்தும் வரல் வேண்டும் என்னும் யாப்புறவு இன்மையின்.
225
விளக்கம்:
நெடுநல்வாடை என்ற பத்துப்பாட்டில்
ஒன்றாகும் பாடல் தலைவனைப்
பிரிந்த தலைவி நிலைப்பற்றிக் கூறுவதால் அகமாகுமேனும், ‘வேம்புதலை
யாத்த நோன்காழ் எஃக |