மொடு’ என்று பாண்டியனுடைய
அடையாளப்பூக் கூறப்பட்டமையால்,
அகமாகாது அகப்புறமாயிற்று. இவ்வாறு வருவன பிறவும்
கொள்ளப்படும்.
முழுதும்--
ந, அ. 250
225
அகத்திணை இயலுக்குப் புறனடை
598 கூறிய அல்ல வேறுபிற தோன்றினும்
கூறிய வற்றொடு கூட்டி மெய்கொளக்
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே,
இஃது இவ்வகத்திணைஇயற்கு ஆவது ஒரு புறனடை கூறுகின்றது.
(இ-ள்) யாம் கூறிய பொருள் அன்றி வேறு பிறவாற்றான் தோன்றிய
ஆயினும், அவற்றையும் எடுத்து ஓதப்பட்ட பொருள்களோடு ஒருவாற்றான்
சார்த்தி, உண்மை புலப்படச் சொல்லிப் பிறர்க்கு உணர்த்துதல்,
நற்குணங்களை உடையார்க்கு மரபு என்றவாறு.
வேறு பிறவாவன, பெரும்பொருளகத்து வேறு பலவாகக் கூறிய
அகப்பொருள் இலக்கணங்களை. அவை எல்லாம் ஈண்டு உரைப்பின்
பெருகும். அவை ஆங்காங்கே கண்டு கொள்க. ஈண்டுக் கூறிய ஒழிபு
இலக்கணங்களுள் உதாரணம் காட்டாதவற்றிற்கெல்லாம்
மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் காண்க. 226
விளக்கம்
பெரும்பொருள் -- பழங்காலத்துப் பொருளிலக்கணம் பற்றி இயற்றப்பட்ட
பெருநூல் போலும்.
(சிந். 187. நச். உரை)
|