102

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "அற்புதம் சிலேடை அதிசயம் விரோதம்
     ஒப்புமைக் கூட்டம் தற்குறிப் பேற்றம்
     விலக்கே ஏதுஎன வேண்டவும் படுமே".                    - தண்டி. 33 

    "புகழ்ச்சி பழிப்பு விரோதம் கருத்திசை உண்மைஐயம்
     இகழ்ச்சி எதிர்பொருள் அற்புதம் நோக்கு இதரேதரந்தான்
     நிகழ்ச்சி மிகைபண்பு உயர்வு நியமம் அநியமமும்
     திகழ்ச்சிமலி தடைதெற்றுச் சிலேடை துணிவென்பரே".         - வீ. 156 

    "உம்மை பொருளினொ டொப்புமைக் கூட்டம் அபூதத்தொடு
     செம்மை திகழ்வாக் கியப்பொருள் கோவைதிண் காரணமும்
     வெம்மை மயக்கம் பலவியல் விக்கிரி யத்தினொடு
     மெய்ம்மையில் சந்தா னமுமென் றுவமை விகற்பிப்பரே".         வீ. 157 

    "பலபொருள் ஒருபொருள் ஒருவயன் பலவயின்
     போல் இல்பொருள் மறுபொருள் விபரீதம்
     மருட்கை தலைதடு மாற்றம் விகாரம்
     தடுமாற் றம்மே சமுச்சயம் இன்சொல்
     நியமம் அநியமம் புகழ்நிந்தை உவமம்
     மோகம் அவயவம் அவயவி முற்றே
     ஏக மாலைஅந் தாதிபொது நீங்கலென்று
     ஆக ஐயைந் தாமதன் விரியே".                             - மா. 101 

    "உருவகம் நிரல்நிறை அதிசயம் சிலேடை
     தற்குணம் தற்குறிப்பு அற்புதம் விரோதம்
     ஓப்புமைக் கூட்டம் ஏது விலக்குடன்
     மெய்ப்பட விரவும் மேதக வுடைத்தே".                       - மா. 110 

    "இவைதத் தமவிலக் கணங்களிற் றிறம்பாது
     உவமச் சொற்புணர்ந் திறினஃ துவமை".                      - மா. 111 

    "உவமை விகற்பித் துரைக்குங் காலை
     விரியே தொகையே இதரேதரம் விபரீதம்
     மறுபொருள் நியமம் ஐயம் இன்சொல்
     கூடா உவமை கோத்த மாலை
     உண்மை எனஇவை உவமை விரியே".                   - தொ, வி, 329