அணியியல் - உவமையணி்

105 

    "அக்குணம் முதலிய அடங்கி வருவது
     தொகையாம் எனப்பெயர் சூட்டப் படுமே."              - மு. வீ. பொ. 5 

    "மொழிந்த வருணியம் முதலிய நான்கினும்
     ஒன்றும் பலவும் தொகுவது தொகை அஃது,
     எண்வகைத் தாக இயலும் என்ப."                             - சந். 7 

    "வாயும் பொதுமை உவமை உருபுவ மானமுவ
     மேயம்ஒன்றும் பலவும் குறைந்தால் தொகை மேவுவமை".        -குவ. 2] 


     தான் சுட்டியதனைப் பவளம்போலும் செய்யவாய் என்று
 விரித்துக்கூறாது பவளவாய் என்று தொகுத்துக் கூறியவழி வன்மையினானும்
 செல்லுமேனும் செலுத்தாது,

    "சுட்டிக் கூறா உவமம் ஆயின்
     பொருள்எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே".        - தெ. பொ. 282 


 என்ப ஆகலின் சுட்டியதனோடு புணர்க்கப்படும் என்பது தோன்றத் "தொன்னெறிப்
 புலவர் தொகுத்த தொகை உவமம்" என்றார்.ஒன்றென முடித்தலான் பண்பு முதலியன
 விரிந்தும் தொக்கும் நின்றாற்போல, உவம உருபுகளும் பவளம் போலும் வாய் என
 விரிந்தும் பவளவாய் எனத் தொக்கும் வரும் எனக் கொள்க.

     [பொதுத்தன்மையைச் சுட்டிக் கூறாதவழி, உவமை மரபு பற்றியே வழங்கப்படும்
 ஆதலின், அம்மரபையே பற்றுக் கோடாகக் கொண்டு பொதுத் தன்மையைக் கோடல்
 வேண்டும். பவளவாய் என்பதன்கண் பவளத்தின் செந்நிறமும் வாயின் செந்நிறமுமே
 கொள்ளப்படல் வேண்டும். அல்லாக்கால் வல்லென்ற பவளத்திற்கும் மெல்லென்ற
 இதழுக்கும் ஒப்புமை யாண்டையது என்பர் பேராசிரியர்.          - தொ. பொ. 282

     சுட்டிக்கூறா உவமத்தைக் குறிப்புவமை என்னும் மாறன் அலங்காரம். - மா. 99]