அணியியல் - உவமையணி்

107 

    "மேதக எதிரெதிர் விளம்பிய பொருளும்
     எதிரும் பொருவுதல் இதரே தரமே"                    - வீர. உரை. 156 

.     "இதரேதரம் என்ப இருபொருள் மாறலே".               - தொ. வி. 331 

.     "ஒருகால் பொருள்உவமம் ஆகியும் உவமை
      ஒருகால் பொருளா கியும்ஒரு தொடர்ச்சி
      இடையே போதுவது இதரே தரமே".                  - மு. வீ. பொ. 6 

.     "இருபொருளுக்கு உவமானோ வமேயத் தியல்புதனைப்
      பரியாய மாக்கின் புகழ்பொருள் ஒப்பணி"                    - குவ. 3 

.     "வாக்கியம் இரண்டனுள் வருணியா வருணியம்
      மாறத் தொடுத்தல் புகழ்பொரு ளுவமை.".                      - ச. 9 

     "நின் கண்போல் கயல் களிக்கும்,
      நின் முகம்போல் தாமரையும் செவ்விதரும்"


 என இப்பாடலில் இரண்டாம் முறையாக உபமேயங்களை உபமானங்களாக
 மாற்றிக் கூறயிமை காண்க. முதலில் பட்டாங்கு கூறிப் பிறகு மாற்றிக் கூறுவது
 இது. இவ்வாறன்றி உபமேயத்தை உபமானமாக மட்டும் கூறுவது விபரீத உவமை என
 விளக்கப்படும்.இதனைப் புகழ் பொருளுவமையணி என்ற தனி அணியாகச்
 சந்திராலோகம் குறிப்பிடும். வடநூலார்உபமேயோபமாலங்காரம் என்பர்.]

சமுச்சயவுவமை

 அதனான் அன்றி அதனை அஃது ஒப்பது இதனானும் ஒக்கும் என்னும் சமுச்சயம்
 வருமாறு :

    "அளவே வடிவுஒப்பது அன்றியே, பச்சை
     இளவேய் நிறத்தானும் ஏய்க்கும்; - துளவுஏய்
     கலைக்குமரி போர்துளக்கும் கார்அவுணர் வீரம்
     தொலைககும்அரி ஏறுஉகைப்பாள் தோள்"

 என வரும்.