108

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [ஒன்றனை ஒரு காரணத்தான் மட்டுமன்றிப் பிறிது ஒரு காரணத்தானும்
 உவமையாக்குவது சமுச்சய உவமையாம். சமுச்சயம் - எச்ச உம்மை. இது உம்மை
 உவமை எனவும் பெயர் பெறும். (வீர. 157)

     போரில் அவுணர் வீரத்தை அழிக்கும் சிங்கத்தை இவர்ந்து செல்பவளும்
 திருத்துழாய்மாலையை அணிந்திருப்பவளுமாகிய கொற்றவையின் தோள்களை இளைய
 வேய்கள் அளவானும் வடிவானும் ஒத்தலேயன்றி நிறத்தானும் ஒக்கும் - என்ற
 இப்பாடலில், பசிய மூங்கில்கள் தோளுக்கு உவமையாதற்கு உரிய
 பொதுத்தன்மைக்கண் அளவு வடிவோடு நிறமும் என்ற உம்மையடுத்த சொல்லைப்
 புணர்த்தமை சமுச்சயமாக அமைந்திருத்தல் காண்க.

    "இக்குறி அதனா லன்றிஇத னாலும்
     ஒக்கும்என்று இசைப்பது உம்மை உவமை"             - வீர. 157 உரை] 

உண்மையுவமை

     மேதகு உவமையை விலக்கி அப்பொருளையே ஓதி முடிக்கும் உண்மை உவமை
  வருமாறு :

    "தாமரை அன்று; முகமேஈது; ஈங்குஇவையும்,
     காமரு வண்டுஅல்ல, கருநெடுங்கண்; - தேமருவு
     வல்லியெனின் அல்லள், இவள்,என் மனம்கவரும்
     அல்லி மலர்க்கோதை யாள்"

 என வரும்.

     [உபமானத்தை உபமேயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அஃது
 ஒப்புமையாகாமையான் அதனை விடுத்து உபமேயத்தையே குறிப்பிடுவது உண்மை
 உவமையாம். உவமையை நீக்கும்முன் அதனை ஒப்பிடுதல் நிகழ்ந்தமையின், இதுவும்
 உவமை வகையுள் ஒன்றாகும். இதனைத் தொல்காப்பியனார்,