அணியியல் - உவமையணி்

109 

    "ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே"                      - தொ. பொ. 308 

     என்று குறிப்பிடுவார். இது தாமரை அன்று; முகமே. இவையும் வண்டல்ல,
 கருநெடுங்கண்களே. இவள் கொடி அல்லள்; என் மனம் கவரும் மாலை குடிய
 மங்கையே - என உவமைகள் மறுக்கப் பட்டு உபமேயங்களே
 உரைக்கப்பட்டமை காண்க.

    "பொருளையும் சினையையும் பொருஅன்று என்று
     உரையினில் கோடல் உண்மை உவமை"                - வீர. உரை 156 

    "உண்மை உவமையாம் உவமை மறுத்தென
     நுண்மையின் பொருள்திறம் நுவன்று விளக்கலே".        - தொ. வி. 339 

    "உவமையைக் கூறி மறுத்தல் பொருளை
     உரைத்து முடிப்பஃது உண்மையாம் எனலே."           - மு. வி. பொ. 9 

மறுபொருளுவமை

 ஓதிய பொருள்தனக்கு ஒப்பது ஓர் பொருள்பின் நீதியின் நிறீஇய மறுபொருள்
 உவமை வருமாறு :

    "அன்னைபோல் எவ்வுயிரும் தாங்கும் அநபாயா!
     நின்னையார் ஒப்பார் நிலவேந்தர் - அன்னதே
     வாரி புடைசூழ்ந்த வையகத்திற்கு இல்லையால்
     சூரியனே போலும் சுடர்"

 என வரும்.

     [முன்னர் ஒரு பொருளை ஒரு தொடரால் குறிப்பிட்டு இடையே உவமை உருபு
 புணர்த்துப் பின்னர் ஒப்பான மற்றொரு பொருளை ஒரு தொடரால் குறிப்பிடுவது
 மறுபொருளுவமை.

     அன்னைபோல் உயிர்களைக் காக்கும் அநபாயனுக்கு நிகரான உலக மன்னர்
 பிறர் இல்லை. அவ்வாறே உலகில் இருள்கடிதற்குச் சூரியனைப் போன்ற கூடர் பிறிது
 இன்று - என முதல்தொடரில் குறிப்பிடப்பட்ட பொருளுக்கு ஒப்புமையான பொருள்
 அடுத்த தொடரில் அமைக்கப்பட்டவாறு.