110

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இவ்வணியில் இடையே உள்ள உவமை உருபு இல்லையேல், இஃது
 எடுத்துக்காட்டுவமையாகும். உபமானமும் உபமேயமும் தனித்தனி
 வாக்கியங்களாக அமைய, உவமை உருபு வாராமல் இருப்பது எடுத்துக்காட்டுவமை.

     (எ-டு.): "அகர ........உலகு"                                 - குறள் 1] 

    "அகரம் முதல எழுத்துஎல்லாம்; ஆதி
     பகவன் முதற்றே உலகு".                                   - குறள் 1 

     என்புழி இரண்டுபொருள் வேறுவேறு கூறியதுஅன்றி, அகரம் முதல
 எழுத்துஎல்லாம் அதுபோல என்றானும், ஆதி பகவன் முதற்றே உலகு அதுபோல
 என்றானும் ஒன்றாகத் துணியுமாற்றான் உவமையும் பொருளும் நீதியின் நிறுவாமையின்
 அது வேறுபட வந்த உவமத் தோற்றமாய் இதன்பாற்படும். என்னை?

    "வேறுபட வந்த உவமத் தோற்றம்
     கூறிய மருங்கின் கொள்வழிக் கொளாஅல்"           - தொல். பொ. 307 

 என்ப ஆகலின்.

     மறுபொருள்உவமை எனினும் எடுத்துக்காட்டு உவமை எனினும் ஒக்கும்.

     [மறு பொருளுவமைக்கும் எடுத்துக்காட்டுவமைக்கும் உள்ள வேறுபாடு
 விளக்கப்பட்டது

     "அன்னைபோல்" என்ற பாடலில் அன்னதே என்ற தனிச் சொல் இன்றி அது
 சவலைவெண்பாவாக அமையின், அஃது எடுத்துக்காட்டுவமையாகும்.
 மேல்கூறப்பட்டுள்ள விளக்கத்தை நோக்க "மறுபொருள்.........ஒக்கும்" என்ற தொடர்
 ஏடு எழுதுவோரால் பின்னர்ச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.]