"மறுபொரு ளாம்பொருள் வந்துஒப்பு உரைத்தலே". - தொ. வி. 333
"புகன்றுமுன் வைத்த பொருட்கு நிகர்வதோர்
பொருள்பினும் வைப்பது மறுபொரு ளாகும்" - மு. வி. பொ. 8
"ஒருபொருட்கு ஒருபொருள் உவமை யாக
எடுத்துக் காட்டுவது எடுத்துக்காட் டுவமை
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே." - மு. வி. பொ. 36
புகழுவமை
நினைத்து உவமிக்கும் நிலையின் மற்று அதனைப் புனைந்து உவமிக்கும் புகழ்
உவமை வருமாறு :
"இறையோன் சடைமுடிமேல் எந்நாளும் தங்கும்
பிறைஏர் திருநுதலும் பெற்றது ; - அறைகடல்சூழ்
பூவலயம் தாங்கும் அரவின் படம்புரையும்,
பாவை! நின் அல்குல் பரப்பு"
என வரும்.
[உபமானமாகக் கூறப்படும் பொருளுக்கு அடைகள் தந்து அதனை மாத்திரம்
புகழ்ந்து கூறுவது புகழ் உவமையாகும். "சிவபெருமான் இவ்வுலகைத் தாங்கும்
ஆதிசேடனுடைய படத்தை உன் அல்குல் ஒத்திருக்கிறது" - என்ற தலைவன்
நயப்புரையில், உபமானமாகிய பிறை - இறையோன் சடைமுடி மேல் எந்நாளும்
தங்கும் பிறை எனவும், அரவு-அறைகடல்சூழ் பூவலயம் தாங்கும் அரவு எனவும்
புகழப்பட்டிருத்தலின் இது புகழ் உவமையாகும்.