[ஒரு பொருளுக்கு ஒன்றனை உபமானமாகக் கூறி அதனோடு அமையாது,
அதுபோன்ற பிற பொருள்கள் உளவேல் அவையும் உபமானமாகும் என்று கூறுவது
அநியம உவமையாம்.
அலைசூழ்ந்த காவிரி பாயும் சோழநாட்டில் உள்ள முல்லை மணம் கமழும்
கூந்தலை உடைய நங்கையே! அழகிதாய்த் தேன் நிறைந்த முள்முருங்கைப்பூவே நின்
வாய் நிறத்திற்கு ஒப்பவாது; அதுபோன்ற பொருள் பிறஉளவேனும் உவமை கூறலாம் -
என்ற இப்பாடலில், முள்முருங்கையன்றிப் பிறவும் ஒப்பாகலாம் என உவமையை
வரையறுக்காது கூறுவது அநியம உவமையாம்.