118

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
     மருள்அறு சிறப்பின்அஃது உவமம் ஆகும்".          - தொல். பொ. 284 

 என்ப ஆகலின்.

     [உபமேயத்தை உபமானமாகக் கொண்ட அளவில் உபமானத்திற்கு உரிய
 பொருமை அதற்கு ஏற்றப்பட்டுவிடுகிறது. உவமிக்கப்படும் நிலையில் அது தனக்கு
 உபமேயமாகச் சொல்லப்படும் பொருளினும் மேம்பட்டதாகிவிடுகிறது.

     "வளரும் முலையை ஒத்த மொட்டு விரிந்து, முகம் போல மலர்ந்த
 தெய்வத்திற்குப் பூசனை செய்ய உதவும் தாமரை" என்ற இத்தொடரில், வருமுலையும்
 திருமுகமும் உபமானமாகவும், தாமரை முகையும் தாமரை மலரும் உபமேயமாகவும்,
 கொள்ளப் படும் நிலையில் வருமுலைக்கும் திருமுகத்திற்கும் தாமரை மொட்டு"
 தாமரைமலர் என்பனவற்றைவிட அதிக ஏற்றம் தரப்பட்டுள்ளமை காண்க.

     இதனை எதிர்நிலைஅணி என்று சந்திராலோகம் கூறும். வடநூலார்
 பிரதீபாலங்காரம் என்பர்.

     இது தெற்றுவமை எனவும் பெயர் பெறும்.

    "பொருள்போல் அமைந்த பொருஇது என்னும்
     மரபொடு தெற்றி வருவது தெற்றே".                    - வீ. உரை. 156 

    "விபரீதம் பொருளா விளம்பிய உவமையே".              - தொ. வி. 332 

    "புகலரும் உவமையைப் பொருளது வாக்கிப்
     பொருளை உவமைப் பொருள தாக்கி
     உரைப்பது விபரீத உவமை யாகும்".                  - மு. வீ. பொ. 15] 

வேட்கையுவமை

     அரும்பொருள் அதனை அதுபோலும் என்ன விரும்பும்என் உள்ளம் எனும்
 வேட்கை உவமை வருமாறு :