அணியியல் - உவமையணி்

119 

    "நன்றுதீது என்றுஉணராது என்னுடைய நல்நெஞ்சம்,
     பொன்துதைந்த பொன்சுணங்கின் பூங்கொடியே! - மன்றல்
     மடுத்ததைந்த தாமரைநின் வாள்முகத்துக்கு ஒப்புஎன்று
     எடுத்துஇயல்பல் வேண்டுகின்றது, இன்று"

 என வரும்.

     [ஒரு பொருளை மற்றொரு பொருளுக்கு ஒப்பாகக் கூறுவதற்கு மனம்
 விரும்புகின்றது என்று குறிப்பிடுவது வேட்கை உவமை ஆகும்.

     "பூங்கொடியே" இங்ஙனம் கூறுவது நன்றோ தீதோ என்று ஆராயாது என்
 நெஞ்சம்பள்ளத்தில் நெருங்கி வளரும் தாமரை மலரை நின் ஒளியுடைய முகத்திற்கு
 ஒப்பாகக் கூற விரும்புகின்றது" - என்ற தலைவன் நயப்புரையில் தாமரையை
 முகத்துக்கு ஒப்பாகக் கூறுவதன் காரணம் முகத்தின்மாட்டுத் தலைவன் கொண்ட
 வேட்கையே என்பது விளக்கப்பட்டவாறு.

     இது கருத்துவமை எனவும் பெயர்பெறும்

    "பொருந்திய பொருட்குஇது பொருவெனக் கருதுதல்
     கருத்தின் உவமை என்மனார் புலவர்".                 - வீர. உரை. 156 

    "பொருளை இன்னது போலும்என்று அறைய
     வேட்கின்றது என்னுளம் என்பது வேட்கை".           - மு. வீ. பொ. 16] 

பலபொருளுவமை

     ஒருபொருள் அதனுக்கு ஒப்பது ஒன்று அன்றிப் பல பொருள் காட்டும்
 பலபொருள் உவமை வருமாறு :

    "வேலும் கருவிளையும் மென்மானும் காவியும்
     சேலும் வடுவகிரும் செஞ்சரமும் - போலுமால்;
     தேமருவி உண்டு சிறைவண்டு அறைகூந்தல்
     காமருவு பூங்கோதை கண்"

 என வரும்.