[ஒரே பொருளுக்குத் தொடர்ந்து பல உவமைகளைச் சுட்டுவது பல பொருள் உவமையாகும்.
கூந்தலில் பொருந்தித் தேனை விரும்பி உண்டு வண்டுகள் ஒலிக்கும் பூங்கோதையின் கண்கள் வேல், கருவிளை, மான், காவி, சேல், மாவடுவின் பிளப்பு, கொடிய அம்பு இவற்றை நிகர்க்கும் - என்ற இப்பாடலில் கண்களுக்கு வேல் முதல் அம்பு ஈறாகிய பல உவமைகளும் குறிப்பிடப்பட்டமை காண்க.
இது பலவியல் உவமை எனவும் பெயர்பெறும்.
"உயர்பொருள் ஒன்றை ஒக்கும் உவமை
பலவுடன் கூறுதல் பலவிய லாகும்". - வீர. உரை. 157
"ஒருபொருட் குப்பல உவமுறல் பலபொருள்
உவமை என்மனார் உணர்ந்திசி னோரே". - மு. வீ. பொ.17]
விகாரவுவமை
கூறுபடும் உவமையின் கொள்கை பிறிதுஆக வேறு படுத்து இசைக்கும் விகார உவமை வருமாறு :
"சீத மதியின் ஒளியும், செழுங்கமலப்
போதின் புதுமலர்ச்சி யுங்கொண்டு, - வேதா, தன்
கைம்மலரான் அன்றிக் கருத்தான் வகுத்துஅமைத்தான்
மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்"
என வரும்.
[உவமைப் பொருளை நேராகக் கூறாது அதன் சிறந்த கூறு ஒன்றனைக் கொண்டு அதற்குமேல் கற்பனை செய்து உவமிப்பது விகார உவமையாம்.
இப்பூங்கோதையாளின் முகத்தைப் பிரமன் தன் கைகளால் படைக்காமல், குளிர்ந்த மதியின் ஒளியினையும், சிறந்த தாமரையின் மலர்ச்சியையும் எடுத்துக்கொண்டு தன் மனத்தால் படைத்து அமைத்தான் - என்ற இப்பாடலில், மதியினையும் தாமரையையும் |
|
|