"இப்படி என்பது இயம்பியது உடைமையின்
அப்பொரு வாம்எனும் அற்புத உவமை - வீர. உரை. 156]
சிலேடை உவமை இரண்டனுள் செம்மொழிச்சிலேடை உவமை வருமாறு:
"செந்திருவும் திங்களும் பூவும் தலைசிறப்பச்
சந்தத் தொடையோடு அணிதழுவி, - செந்தமிழ்நூல்
கற்றார் புனையும் கவிபோல் மனம்கவரும்
முற்றா முலையாள் முகம்"
என வரும்.
[சொற்களைப் பிரிக்காமல் சிலேடைப் பொருள் கொண்டு உவமை செய்வது செம்மொழிச் சிலேடை உவமை. செந்தமிழ் நூல் கற்றார் புனையும் கவிகள், தொடக்கத்தில் மங்கல மொழிகளாகத் திரு - திங்கள் - பூ முதலிய சொற்கள் அமையப் பெற, நல்ல ஓசைநயம் சான்ற எதுகை மோனை முதலிய தொடைகளோடு, பொருளணி சொல்லணிகள் அமையப்பெற்றுக் கற்றார் மனத்தைக் கவரும்; முற்றாமுலையாள முகம், திரு - திங்கள் - என்ற தலையணிகளும் பூவும் தலையில் சிறக்க, நறுமண முடைய மாலைகளோடு பல அணிகளையும் அணிந்து மனம் கவரும் - என இப்பாடல் சிலேடை உவமையாயினவாறு காண்க. கற்றார் புனையும் கவி முற்றா முலையாள் முகத்திற்குச் சிலேடை உவமையாகும்.]
பிரிமொழிச் சிலேடை உவமை வருமாறு :
"நளிதடத்த வல்லியின் கண்நெகிழ ஞாலத்து
அளவில் நிறைகடாம் சிந்திக் - களிறுஇகலும்
கந்த மலையா நிலவும், கவடசைய
வந்த மலையா நிலம்"
என வரும். யானைமேல் செல்லுங்கால் நனி - செறிவு; தடம் - பெருமை; வல்லி - விலங்கு; கண் - மூட்டுவாய்; |
|
|