130

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 வேறுபாடு உண்டோ? - என்ற தலைவன் நயப்பு உரைக்கும் இப்பாடலில், பிறந்த
 இடத்து வேற்றுமையன்றி உபமானமாகிய தாமரைக்கும் உபமேயமாகிய முகத்திற்கும்
 எந்த வேற்றுமையும் இல்லை என்று உயர்வு நவிற்சி தோன்ற உவமை அமைத்தவாறு
 காண்க.

     இது மிகை உவமை எனவும் பெயர் பெறும்.

    "இவ்வயின் கண்டது பொருளையும் பொருவையும்
     இவ்வயின் கண்டதுஎன் பதுமிகை உவமை"             - வீர. உரை. 156] 

     விரோத உவமை வருமாறு :

    "செம்மை மரைமலரும் திங்களும் நும்முகமும்
     தம்முள் பகைவிளைக்கும் தன்மையவே; - எம்முடைய
     வைப்புஆகம் சென்னி வளம்புகார் போல்இனியீர்!
     ஒப்புஆகும் என்பாரும் உளர்"

 என வரும்.

     [உபமானங்களும் உபமேயமும் தம்முள் பகைமை உடையன என்று கூறிப் பின்
 அவற்றை ஒப்புமையுடைய பொருளாகச் சொல்லுதல் விரோத உவமையாகும்.
 ஒப்பு நோக்கிய அளவிலேயே பகைமை உண்மை பெறப்படுதலின், விரோதத்தின்
 கண்ணும் உவமை அமைந்துள்ளது.

     இனியீர்! செந்தாமரையும் சந்திரனும் உங்கள் முகமும் தம்மில் பகைமை
 உடையவாயினும், அவற்றை ஒன்றை ஒன்று ஒக்கும் என்றும் கூறுவாரும் உளர் -
 என்ற இப்பாடலில், உபமானமாகிய தாமரை சந்திரன் என்பனவற்றிற்கும் உபமேய
 மாகிய முகத்திற்கும் பகைமை உண்மையை வெளிப்படுத்தி உவமிப்பது இவ்வணியாதல்
 காண்க.

    "புகழ்பெறு பொருளும் பொருவும் ஒன்றைஒன்று
     இகழ்வது விரோதம் என்மனார் புலவர்"               - வீர. உரை. 156]