அணியியல் - உவமையணி்

131 

     ஒப்புமைக்கூட்ட உவமை வருமாறு :

     விண்ணின்மேல் காவல் புரிந்துறங்கான் விண்ணவர்கோன்
     மண்ணின்மேல் அன்னை, வயவேந்தே! - தண்ணளியின்
     சேரா அவுணர் குலம்களையும் தேவர்கோன்;
     நேரார்மேல் அத்தகையை நீ

 என வரும்.

     [பண்பு பற்றியோ தொழில் பற்றியோ பல பொதுத் தன்மைகள் கூறி, ஒரு
 பொருளுக்கு மற்றொரு பொருளை ஒப்பிட்டு உவமை கூறுதல் ஒப்புமைக் கூட்ட
 உவமையாம்.

     வேந்தே! வானுலகைக் காத்து உறங்காதிருக்கும் இந்திரனைப் போல நீயும்
 மண்ணுலகைக் காத்து உறக்கமின்றி உள்ளாய். தேவர்உலகத்தவரிடம் கொண்ட
 கருணையால் பகைவராகிய அவுணர் குலத்தைத் தேவேந்திரன் அழிப்பது போல, உன்
 குடிமக்களிடத்துக் கொண்ட கருணையால் நீயும் அவர் பகைவரை அழிக்கின்றாய் -
 என்ற இப்பாடலில், ஒப்புமை உடைய தேவேந்திரன் அரசன் என்ற இருவருடைய
 செயல்களும் ஒப்பிடப்பட்டமை காண்க.

    "இப்படி எனப்பொருள் இரண்டும்நற் பொருவுதல்
     ஒப்புமைக் கூட்டமென்று ஓதினர் புலவர்"              - வீர. உரை. 157] 

     தற்குறிப்பேற்றவுவமை வருமாறு :

    "உண்ணீர்மை தாங்கி, உயர்ந்த நெறிஒழுகி
     வெண்ணீர்மை நீங்கி விளங்குமால்; - தண்ணீர்த்
     தரம்போலும் என்னத் தருங்கடம்பை மாறன்
     கரம்போல் கொடைபொழிவான் கார்"

     [ஒருபொருளின் இயற்கை நிகழ்ச்சிகளைக் கவி தானே கற்பனை செய்து பிறிது
 ஒன்றன் நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுதல் தற்குறிப்பேற்ற உவமையாம்.