134

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

இதுகாரண உவமை எனவும் பெயர்பெறும்.

"இதனால் இப்பொருள் ஒக்கும் எனக்குணம்
துதியால் சொல்லுதல் ஏது உவமை". - வீர. உரை. 157

இந்நூலில் கூறப்படாத உவமை வகைகள்:

வீரசோழியம்

மாறன்அலங்காரம்

   
இகழ்ச்சி உவமை நிறை உவமை
பண்புவமை குறை உவமை
பொருளுவமை ஒருபொருளுவமை
வாக்கியப் பொருளுவமை அவயவி உவமை
தலைப்பெயல் மரபின் சார்ந்து வரல் உவமை அவயவி உவமை
ஒருவழி ஒப்பின் ஒருபொருள் மொழிதலுவமை முற்றுவமை
சந்தான உவமை அந்தாதி உவமை
இழிபுயர்வுப் புகழ்ச்சி உவமை தலைதடுமாற்ற உவமை
உயர்விழிவுப் புகழ்ச்சி உவமை ஏக உவமை
சம உவமை நிரல்நிறை உவமை
ஒப்புமறை உவமை தற்குண உவமை
அந்நிய உவமை என்பனவாம். என்பனவாம்.
இவை பிற்சேர்க்கையில் விளக்கி உரைக்கப்பட்டுள்ளன.

ஒத்த நூற்பாக்கள்

"அற்புதம் சிலேடை ............படுமே". - தண்டி. 33

"உருவகம் நிரல்நிறை ............உடைத்தே". - மா. அ. 110]