உவமைஆகிய போழ்தூண்டு ஊசித்தொழிற்குப் பலஅடை புணர்ப்பினும், அவை
அனைத்தும் போர்த் தொழில் விரைவையே சிறப்பித்து வந்தமையான் வழுவாகாது,
இலக்கணம் ஆம் எனவும்,
[ஊரில் திருவிழாத் தொடக்கம் ஆதலின் அச்செலவிற்குப் பொருள் வேண்டும்.
மனைவி மகப் பயந்துள்ளாள்; அவள் செலவிற்கும் பொருள் வேண்டும்.
அப்பொழுதுதான் மழை நின்றுள்ளது. கதிரவன் மறையத்தொடங்கிவிட்டான். மீண்டும்
மழை தொடர்வதன் முன்னும் இருள் சூழ்வதன் முன்னும் பொருள் தேடுதல்
வேண்டும். பொருள் வருவாய்க்கு உரிய ஒரேவழி கட்டில் பின்னுதலே. அக்கட்டிலைப்
பின்னுபவனுடைய வாரைச் செலுத்தும் ஊசி அந்நிலையில் எவ்வளவு விரைவில்
செயற்படுமோ அவ்வளவு விரைவில் போரவை கோப்பெருநற்கிள்ளி முக்காவ நாட்டு
ஆமூர் மல்லனோடு பொருத போர் செயற்பட்டது - என்ற இப்பாடலில், போழ்தூண்டு
ஊசிக்கு அடைபல கொடுத்து உபமேயமாகிய நெடுந்தகை போருக்கு அடை
கொடாவிடினும் உண்டாட்டும் கொடையும் உரனொடு நோக்கி மறுத்தலும் முதலிய பல
திறத்தால் பகைவரை விரைவில் அழித்தற்கு விரைகின்றது. நெடுந்தகை படை என்ற
கருத்து பெறப்பட்டவாறு காண்க. (பேராசிரியர் உரை)
உபமான அடையால் உபமேயம் பயன்பட வரும் உவமை விழுமிதாய
குறிப்புவமை எனவும் சிறப்புவமை எனவும் படும். - மா. அ. 99, 102