[அவாவினைப் போன்ற அகன்ற அல்குலின் மேல் சான்றோருடைய உரையாடல் போலக் குறுகிய இடை உள்ளது. மறைப்பொருளை வெளிப்படுத்தும் பேதைக்கு உரைக்கும் ஒருவனுடைய தவறு போல மாலை சூடிய இக்கொம்பு போல்வாள் தனங்கள் பெருகியுள்ளன - என்ற இப்பாடலில் இழிந்த பொருள் களாகிய அவா, பேதைக்கு உசாவினை உரைப்பான் பிழைப்பு என்பன முறையே அல்குலுக்கும், முலைக்கும் உவமையாகக் கூறப்பட்டவாறும், உயர்ந்த பொருளாகிய சான்றோர் உரையாடல் இடைக்கு உவமையாகக் கூறப்பட்டவாறும் குறித்த பொருளை இனிது விளக்கும் திறத்தான் நன்மக்களால் தக்கன என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன.]
"இரங்காழ் அன்ன திரங்குகண் வருமுலைச்
செம்முதுப் பெண்டின் காதல்அம் சிறாஅன்,......
குடப்பால் சில்உறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே" - புறநா. 276
எனவும், இறப்பஇழிந்தனவற்றோடும் இறப்ப உயர்ந்தன வற்றோடும் உவமிப்பினும் அவை தத்தம் உவமேயங்களைச் சிறப்பித்து வந்தமையான் வழுவாகாது இலக்கணம் ஆம் எனவும்,
[இர மரத்தின் பரல்போல வற்றிய கண்களை உடைய முலையையுடைய செம்மையையே பண்பாகக்கொண்ட இம் மறக்குடி மகளுடைய அன்புக்குரிய புதல்வன், குடம்பாலையும் சில உறை திரியச்செய்யுமாறு போலப் பெரும்படையையும் சிதறி ஓடச்செய்துவிட்டான் - என்ற இப்பாடலில், குடப்பால் சில்உறையின் செயல் என்ற இழிந்த உவமம் வீரன் செயலுக்கு உபமானமாக வரினும் பொருளை நன்கு விளக்கும் திறத்தான் மேதக்கது என்று சான்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு காண்க.]
"நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி" - அகநா. 84
எனவும், |
|
|