142

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "அவாப்போல் அகன்றதன் அல்குல்மேல், சான்றோர்
     உசாப்போல உண்டே மருங்குல்"

 என்பது பெருமைபற்றியும் சிறுமைபற்றியும் உவகை பிறந்தது.

     [அவா என்பது அல்குலுக்குப் பெருமைபற்றிய உவமை. சான்றோர் உசா
 நுசுப்பிற்குச் சிறுமைபற்றிய உவமை. இங்ஙனம் உவமித்தற்கண் எண் மெய்ப்பாட்டினுள்
 ஒன்றாகிய உவகை நிகழ்ந்துள்ளமை காண்க.]

     "கலங்கவிழ்த்த நாய்கன்போல் களைதுணை பிறிதுஇன்றி"

 என்பது துன்பப்பெருக்கம் சொல்லி அவலம் பிறந்தது.

     [கப்பலைக் கவிழ்த்த மீகாமன் தன் துயரம் களைவார் பிறர் இன்றித் தான்
 வருந்துவதுபோல, இன்ப நுகர்ச்சியை இழக்கும் தலைவி தன் துயர் துடைப்பார் பிறர்
 இன்றி வருந்துவாள் - என்ற உவமைக்கண் எண் மெய்ப்பாட்டினுள் ஒன்றாகிய அவலம்
 நிகழ்கின்றமை காண்க.]

    "பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
     வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு"                        - முத்தொள்

 என்பது பெருக்கம் பற்றி இளிவரல் பிறந்தது. பிறவும் அன்ன.

     [முன்பு செல்வராய் இருந்து பின்னர் மிடிப்பட்டார், தம் துயரைத் துடைத்துக்
 கொள்ளும செயற்கண் உளங்கொண்டு, பெரிய செல்வமுடையார் இல்லத்துக்குப்
 புறப்பட்டுப் போய் அவரிடம் தம் குறையக்கூற இயலாதாராய், அவர் வீட்டிற்குப்
 போதலும் உட்புகுதலும் "பின் யாது சொல்வார்களோ?" என்று மீளுதலும் போல, என்
 நெஞ்சு வருதலையும் செல்லுதலையும் போதலையும் செய்கிறது - என்ற இப்பாடற்
 பகுதியில் வறுமைப் பெருக்கம், காமப்பெருக்கம் என்ற இவற்றால் ஏற்படும் நலிவால்
 பிறரால் இகழப்பட்டு எளிமையுறும் இளிவரல் என்ற மெய்ப்பாடு பிறந்தவாறு.]