அணியியல் - உவமையணி்

143 

     இன்னபிற ஆவன, மேல்கூறிய ஐயஉவமையும் பொதுநீங்கு உவமையும் பண்பு
 முதலியன பற்றிப் பொருளோடு பொருள் இயையவைத்தல் இன்மையின் வழுவாம்
 ஆயினும், அவற்றுள் ஐயஉவமை தாமரைகொல் முகம்கொல் என்புழித்தாமரைக்கும்
 முகத்திற்கும் ஒப்புமை கருதாது ஐயம் தோன்றாமையின் அதுவும் பொருளொடு
 பொருள் இயையவைத்தலேயாம் என அமைத்துக் கோடலும்,

     பொதுநீங்குஉவமை "நின்வாள்முகம், தானே உவமை தனக்கு" என்புழி, முன்னர்
 ஒத்தபொருளை எடுத்து ஓதி அவற்றினும் சிறந்தது இது என்ற துணையே அல்லது
 ஒப்புமை வேண்டாது கூறியது அன்மையின் இதுவும் பொருளோடுபொருள் இயைய
 வைத்தலேயாம் என அமைத்துக் கோடலும், மேல்கூறும் உருவகத்துள் உவம
 உருவகம்,

     "வதனமதியம் உதய மதியமே ஒக்கும்"

 என்புழி முன்னர் உருவகம் செய்த மதியினைப் பின்னரும் உவமித்தல் புனருத்தியாகிய
 வழுவாம் ஆயினும் முன் இயல்பு ஆகிய விளக்கமும் குளிர்ச்சியும் நோக்கி
 வதனமதியம் என்று உருவகம் செய்து, பின்னும், மது நுகர்ந்தாள் முகத்துச்
 செய்கையால் உளவாகிய மதர்ப்பும் செம்மையும் நோக்கி உதயமதியம் ஒக்கும் என
 விசேடித் தமையின் வழுஇன்று என அமைத்துக் கோடலும் முதலிய எனக்கொள்க.
 பிறவும் அன்ன.

(22) 

     [இனி, இந்நூலுள் கூறப்படாதனவாய் ஏனைய அணிநூல் களில் கூறப்பட்டுள்ள
 உவமைபற்றிய செய்திகள் பிற்சேர்க்கையில் கூறப்பட்டுள்ளன.]