144

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

    "மிகுதலும் குறைதலும் தாழ்தலும் உயர்தலும்
     பால்மாறு படுதலும் பாகுபா டுடைய".                       - தண்டி 34 

    "ஒப்புமை இல்லதும் ஐயமும் உவமையின்
     செப்பிய திறமும் உவமை உருவகமும்
     உருவகத்து அடக்கலும் உயர்ந்தனர் கொளலே."             - தண்டி 90] 

உவமையுருபுகள்

 642. போல மறுப்ப ஒப்பக் காய்ப்ப
     நேர வியப்ப நளிய நந்த,
     கடுப்ப ஏய்ப்ப மருள புரைய
     ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப,
     அன்ன ஆங்கு மான விறப்ப
     என்ன உறழத் தகைய நோக்க,
     எள்ள விழையப் புல்லப் பொருவக்
     கள்ள மதிப்ப வெல்ல வீழ, என்று
     ஈரெட்டும் எட்டும் இருநான்கும் முறையே
     தத்தம் மரபின் சாற்றும்மூன்று உவமைக்கும்
     ஒத்த உருபாம்; உரைத்தமுத் திறத்தினும்
     ஒன்ற நடுங்க ஏர ஏற்ப
     வென்ற நாட மாற்றப் பொற்ப
     ஆர அமர அனைய அவற்றோடு,
     எதிர ஏய இயைய இகலத்
     துணைப்ப மலையத் தூக்கே செத்தொடு
     கெழுதேர் நகைமிகு சிவண்நிகர் இன்னவும்,
     இன்னன பிறவும், எய்துதல் உரிய

 இது மேற்கூரிய உவமைகளை வரையரை வகையானும் அஃது இன்மையானும்
 புலப்படுத்தும் உருபுகள் இவை என்கின்றது.