146

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 வரலாறு

     போல் - "தன்சொல் உணர்ந்தோர் மேனி
              பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே"         - ஐங்குறு. 41 

 எனவும்,

     மறுப்ப - "மணிநியம் மறுத்த மலர்ப்பூங் காயா"

 எனவும்,

     ஒப்ப - "ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்நிறம்"

 எனவும்,

     காய்ப்ப - "கணைக்கால் நெய்தல் காய்த்திய கண்ணியம்"

 எனவும்,

     நேர் - "கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்"    - அகநா. வாழ்த்து 

 எனவும்,

     வியப்ப - "தண்தளிர் வியப்பத் தகைபெறு மேனி"

 எனவும் வண்ணம் பற்றியும்,

     கடுப்ப - "நீர்வார் நிகர்மலர் கடுப்ப"                      - அகநா. 11 

 எனவும்,

     ஏய்ப்ப - "மோட்டுஇரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப"         - அகநா. 5 

 எனவும்,

     மருள - "வேய்மருள் பணைத்தோள் நெகிழ"               - குறுந். 318 

 எனவும்,

     புரைய - "உரல்புரை பாஅடி"                               - கலி. 21 

 எனவும்,

     ஒட்ட - "முத்துஉடை வான்கோடு ஒட்டிய முலைமிசை"

 எனவும்,

     ஒடுங்க - "பாம்புஉரு ஒடுங்க வாங்கிய நுசுப்பின்"

 எனவும்,