அணியியல் - உவமையணி்

147 

     ஓட - "செந்தீ ஒட்டிய வெஞ்சுடர்ப் பருதி"

 எனவும்,

     நிகர்ப்ப - "கண்ணொடு நிகர்க்கும் கழிப்பூங் குவளை"

 எனவும் வடிவு பற்றியும் வரும் பண்பு உவமையும்,

     அன்ன - "எரிஅகைந்த அன்ன தாமரைப் பழனத்து"        - அகநா. 106 

 எனவும்,

     ஆங்கு - "கயம்நாடு யானையின் முகன்அமர்ந் தாங்கு"       - அகநா. 6 

 எனவும்,

     மான - "புலவுநுனைப் பகழியும் சிலையும் மானச்
            செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்"
        - பெரும். 269, 70 

 எனவும்,

     விற்ப்ப - "புலிவிறப்ப ஒலிதோற்றி"

 எனவும்,

     என்ன - "புலிஎன்னக் கலிசிறந்து உராஅய்"

 எனவும்,

     உறழ - "செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை"         - திருமுருகு. 5 

 எனவும்,

     தகைய - "பொருகளிற்று எருத்தின் புலித்தகைப் பாய்த்துள்"

 எனவும்,

     நோக்க - "மான்நோக்கம் நோக்கும் மடநடை ஆயத்தார்"

 எனவும் வரும் தொழில் உவமையும்,

     எள்ள - "எழிலி வானம் எள்ளினன் தரூஉம்
             கவிகை வண்கைக் கடுமான் தோன்றல்"

 எனவும்,

     விழைய - "மழைவிழை தடக்கை வாய்வாள் எழினி"

 எனவும்,