புல்ல - "புத்தேள் உலகின் பொன்மரம் புல்ல"
எனவும்,
பொருவ - "விண்பொரு புகழ் விறல்வஞ்சி" - புறநா. 11
எனவும்,
கள்ள - "கார்கள்ள உற்ற பேரிசை உதவி"
எனவும்,
மதிப்ப - "இருநிதி மதிக்கும் பெருவள் ஈகை"
எனவும்,
வெல்ல - "வீங்குசுரை நல்வான் வென்ற ஈகை"
எனவும்,
வீழ் - "விரிபுனல் பேர்யாறு வீழ யாவதும் வரையாது சுரக்கும் உரைசால் தோன்றல்"
எனவும் வரும் பயன் உவமையும் வந்துழிக் காண்க.
நளிய, நந்த என்பன வந்துழிக் காண்க.
[போல முதல் நளிய ஈறாகிய எட்டும் உரு உவமத்துக்கும், கடுப்ப முதல் நிகர்ப்ப ஈறாகிய எட்டும் மெய் உவமத்துக்கும், எள்ள முதல் வீழ ஈறாகிய எட்டும் பயன் உவமத்துக்கும் அன்ன முதல் நோக்க ஈறாகிய எட்டும் வினை உவமத்துக்கும் தொல்காப்பியனார் வரையறுத்த உவம உருபுகளாம்
ஆர, அமர, ஏர, ஏர்ப்ப, செத்து, அற்று, கெழுவ கொண்ட என்பனவற்றையும் பொதுவான உவம உருபுகளாகப் பேராசிரியர் குறிப்பிடுவார்.]
"ஒத்த" என்ற மிகையானே இங்ஙனம் வரையறை கூறியவற்றுள்,
"கடல்போல் தோன்ற காடுஇறந் தோரே" - அகநா. 1
என வடிவு உவத்தின்கண்ணும்,
"ஒளித்து இயங்கு மரபின் வயப்புலி போல" - அகநா. 22
எனத் தொழில் உவமத்தின் கண்ணும்,
|
|
|