"அழல்போல் வெங்கதிர் பைதுஅறத் தெறுதலின்" - அகநா. 1
எனப் பயஉவமத்தின்கண்ணும் போலும் என்பதூஉம்,
"பொன்உரை கடுக்கும் திதலையர்" - திருமுருகு. 145
என உருஉவத்தின்கண்ணும்,
"கார்மழை முழக்கு இசை கடுக்கும்"
என வினைஉவமத்தின்கண்ணும்,
"விண் அதிர் இமிழ்இசை கடுப்ப" - மலைபடு. 2
எனப் பயஉவமத்தின்கண்ணும் கடுப்ப என்பதூஉம்,
"செவ்வான் அன்ன மேனி" - அகநா. கடவுள் வாழ்த்து
என உருஉவமத்தின்கண்ணும்,
"இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிறு" - அகநா. கடவுள் வாழ்த்து.
என வடிவு உவமத்தின்கண்ணும்,
"மாரி அன்ன வண்கை" - புறநா. 153
எனப் பயஉவத்தின்கண்ணும் அன்ன என்பதூஉம் கூறியவாறு அன்றிச் சிறுபான்மை பிறழ்ந்து வருதலும் கொள்க.
ஏனையவும் பிறழ்ந்து வருவன உளவேல் காண்க.
"குன்றியும் கோபமும் ஒன்றிய உடுக்கை"
என உருப் பற்றியும்
"வேய்ஒன்று தோள்ஒருபால் வெற்புஒன்று தோள்ஒருபால்"
என வடிவு பற்றியும் வரும் பண்பு உவமத்தின் கண்ணும்,
"வேல்ஒன்று கண்ணார்மேல் வேட்கைநோய் தீராமோ
கோல்ஒன்று கண்ஒன்று கொண்டு"
என வினைஉவமத்தின் கண்ணும்,
"மழைஒன்று வண்தடக்கை வள்ளியோர்ப் பாடி"
எனப் பயஉவமத்தின்கண்ணும் ஒன்ற என்பதூஉம்,
|
|
|