150

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     "படங்கெழு நாகம் நடுங்கும் அல்குல்"

 என வடிவுபற்றிய பண்பு உவமத்தின்கண் கடுப்ப என்பதூஉம்,

     "முத்துஏர் முறுவலாய்"                                     - கலி. 28 

 என உருப்பற்றிப் பண்பு உவமத்தின்கண் ஏர என்பதூஉம்,

     "வாய்என்ற பவளம்"

 என உருப்பற்றிய பண்பு உவமத்தின்கண் என்ற என்பதூஉம்,

     "வேயொடு நாடிய தோள்"

 என வடிவுப்பற்றிய பண்பு உவமைக்கண் மாற்ற என்பதூஉம்,

     "மணிநியம் மாற்றிய மாமேனி"

 என உருப்பற்றிய பண்பு உவமைக்கண் மாற்ற என்பதூஉம்,

     "மதியம் பொற்ப மலர்ந்த வாள்முகம்"

 என வடிவு பற்றிய பண்பு உவமத்தின்கண் பொற்ப என்பதூஉம் வந்தன.
 இவற்றுள் ஒழிந்த உவமை பற்றி வந்தனவும், காட்டாது ஒழிந்த உருபகளும்
 

     இன்ன பிறவாவன : சீர், இற்று, ஐந்தாம் வேற்றுமை உருபாகிய இன்
 முதலியனவாம்.

    "பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
     எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் -- அச்சீர்
     பெருமை உடைத்தாக் கொளினும்கீழ் செய்யும்
     கருமங்கள் வேறு படும்"                                 - நாலடி. 206 

 எனச் சீர் வந்தது. பிறவும் வந்துழிக் காண்க,