152

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய
     ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று
     அப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்",                 -தொ, பொ. 290 

    "போல மறுப்ப ஒப்பக் காய்த்த
     நேர வியப்ப நளிய நந்தஎன்று
     ஓத்துவரு கிளவி உருவின் உவமம்",                              -291 

    "தத்தம் மரபின் தோன்றும்மன் பொருளே",                        -292 

    "நாலிரண்டு ஆகும் பாலுமா ருண்டே".                            -293 

     என்று விளக்கியுள்ளார்,


    "ஆங்க,
     ஒப்பமைச் சொற்களைச் செப்புங் காலை
     ஒப்ப உறழ உணர்ப்ப உரப்ப
     வேய்ப்ப மெத்த மெய்த்த விளக்கப்
     புரையப் பொருந்தப் பொற்பக் கடுப்பக்
     குரையக் கதழக் கருதக் கூட
     நிகர மேவ நோக்க ஓராங்கு
     இகல ஏய இயைப்ப ஓப்ப
     மான மருள மறல நீக்க
     நீர அனைய நோக்கத் தொடிய
     நுணங்கப் படிய துணிப்ப உன்ன
     வணங்க வாவ மலைய என்ன
     வெப்பத் தொழப்ப விட்ட இருள
     இன்ன அன்ன என்றா இவையும்
     துன்னும் என்ப துணிந்திசி னோரே".                      - வீ. 96, மே 

    "போல மானப் புரையப் பொருவ
     நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப
     ஏர ஏய மலைய இயைய
     ஒப்ப எள்ள உறழ ஏற்ப
     அன்ன அனைய அமர ஆங்க
     என்ன இகல விழைய எதிரத்
     துணைதூக்கு ஆண்டுஆங்கு மிகுதகை வீழ
     இணைசிவண் கேழ்அற்றுச் செத்தொடு பிறவும்
     நவைதீர் பான்மை உவமைச் சொல்லே",                   - தண்டி. 35