அணியியல் - உவமையணி்
155
"பவக்கடல் கடந்து முத்தியங் கரையில் படர்பவர் திகைப்பற நோக்கி தவக்கலன் நடத்த வளர்ந்தெழுஞ் சோண சைலனே கயிலைநா யகனே"
பவமாகிய கடல், முத்தி ஆகிய கரை, தவமாகிய கலன் என்ற உருவகங்கள் மிகுதியோ குறைவோ இன்றிச் சமமாக அமைந்தமையின் மிகை குறையில் ஒற்றுமை உருவகம்.
"மங்கை வதன மதியம் களங்கமுடைத் திங்களைஇங் கெள்ளல் செயும்"
வதனமாகிய மதியத்திற்குக் களங்கமின்மையாகிய மிகைச்செய்தி குறிப்பிடப் பட்டமையின் இது மிகையதன் செய்கை உருவகம்.
"பொருதிரைசேர் தண்பாற் புணரி பிறவா(வேறு) ஓருதிருஇம் மாதென் றுணர்"
இம் மாதாகிய திரு பாற்கடலில் பிறவாதவள் என்ற குறைச் செய்கை கூறியது குறையதன் செய்கை உருவகம்.
"இம்மான் முகமதியே இன்பு செயுமதனால் அம்மா மதிப்பயனென் னாம்"
இம்மான் முகமதி என முகத்திற்கும் மதியத்திற்கும் மிகையும் குறையும் சொல்லாமல் சமன் செய்தமையால் இது அவையிலதன் செய்கைஉருவகம்.
முழுதும் - தண்டி. 36
"முக்கியப் பொருளைஓப் புடைப்பொருள் எனமதித்து இருபெய ரொட்டாய் இசைப்பதும் உருவகம்", - மா, 114