156

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "அதுவே,

     தொகையினும் விரியினும் தொடர்இரு வகைத்தே".               மா. 116 

    "அடையிடை புணரினும் கடிநிலை இலவே".                      மா. 117 

    "ஒருதொடர் பினுள்இரு மையுமுறல் உறவே".                     மா. 118 

    "உரைத்தவை இனிவரும் விரிக்குஉறு பொதுவே".                 மா. 119 

    "உருவகம் என்ப உவமை வேறு
     பொருள்வேறு இன்றிப் புணரத் தொடுத்தலே".            - தொ. வி. 341 

    "உவமைப் பொருளுவ மேயப் பொருளையும்
     வேறுபா டொழித்தொன்று எனும்பொருள் விளங்க
     உரைப்பது உருவக மாம்உரை தரினே".                - மு. வீ. பொ. 22 

    "ஓற்றுமை யாலதன் செய்கையி னாலுவ மேயமதில்
     பற்றுவ மானத்தை ஆரோபித் தாலிரு பான்மையுடன்
     உற்றிடும் உருவகம் தான்மிகை யுங்குறை யும்இரண்டும்
     மற்றதும் சேர்ந்திட ஆறாகும் என்பர் அறிஞர்களே".          - குவ. 10 

    "ஓற்றுமை செய்கை ஓன்றால் புனைவுளி
     தன்னில்அல் பொருளைத் தாக்குவது உருவகம்".                - ச. 12 

    "அதுவே,
     ஒற்றுமை அதன்செய்கை என்றுஇரு வகைத்தாய்
     மிகைகுறை இன்மை எனஇரு மூன்றே".                         - ச. 3 

உருவகவிரி

 644. மாட்டேற் றுரைதொகூஉம் தொகைஉரு வகமும்1
      மீட்டுஅது விரித்த விரிஉரு வகமும்2
      சொற்றது தொகுத்தும் தொகாதும் ஒருதொடரின்
      உற்றுவரு தொகைவிரி உருவகத் தானும்3
      பலபொருள் உருவகப் படுத்தின்அப் பலவும்
      இயைவன புணர்க்கும் இயைபுஉரு வகமும்4
      வேட்டன உருவகம் வேறுவேறு இயற்றி