அணியியல் - உவமையணி்
157
ஈட்டுதல் புரிந்த இயைபுஇல்உரு வகமும்5 ஊக்குபொரு ளுறுப்பெலாம் உருவகம் செயின்சில நீக்கின செயும்விய னிலைஉரு வகமும்6 ஓர்ந்துஅடை உருபில் துற்றதை அவற்றால் தேர்ந்துஉரு பிக்கும் சிறப்புஉரு வகமும்7 உருவகம் செய்ததற்கு உறாமரபு இவைஎன விரியக் காட்டும் விரூபகத் தானும்8 பாங்கினது உருவகப் படுத்தியது பாங்குஇலாத் தீங்குதரல் பிறிதின்எனச் செயும்சமா தானமும்9 உருவகம் செய்ததைப் பெயர்த்தும்வேறு ஒன்றா உருவகம் செயும்உரு வகஉரு வகமும்10 ஒட்டிய உறுப்பின்ஒன்று உருவகம் ஆகக் கட்டுரை செயும்ஏ காங்கஉரு வகமும்11 எண்ணிய அவயவம் எவையும்உரு வகமாக் கண்ணுதல் செயும்அநே காங்கவுரு வகமும்12 உற்ற உறுப்புஉறுப் புடையதுஎவ் வகையினும் முற்றுஉரு வகம்செயும் முற்றுஉரு வகமும்13 ஊக்கிய உறுப்பே உருவகம் ஆக ஆக்குதல் செயும்அவ யவவுரு வகமும்14 ஊற்றம்ஆர் அங்கியே உருவகம் ஆக ஆற்றல்சால் அவயவி உருவகம் அவற்றோடு15 உவமை16 ஏது17 வேற்றுமை18 விலக்கே19 அவநுதி20 சிலேடை21 என்றுஅவையு முளப்பட உளம்புகு நெறியான் உரைத்தமூ வேழும் விளம்பிய உருவக விரிஎனப் படுமே.
இஃது உருவகவிரி இத்துணைத்து என்கின்றது.
இ-ள் : மாட்டேற்று உரை தொகூஉம் தொகை உருவகம் முதலாக ஊற்றம் ஆர அங்கியே உருவகம் ஆக ஆற்றல்சால் அவியவி உருவகம் ஈறாகக் கிடந்த