[உருவக விரி பதினைந்தும், ஏனைய அணிகளோடு கூடிய உருவக வகை
ஆறுமாக இருபத்தொரு வகைகள் இந்நூற்பாவில் சொல்லப்பட்டுள்ளன. உருவக விரி
பற்றி ஏனைய நூல்கள் கூறுவனபோலப் பட்டியல் மட்டும் தாராமல்அவ்வவற்றின்
இலக்கணமும நூற்பாவிலேயே விளக்கிக் கூறியுள்ள இந்நூலின் தனிச் சிறப்பு குறித்து
உணரத்தக்கது.]
ஓத்த நூற்பாக்கள்
"தொகையே விரியே தொகைவிரி எனாஅ
இயையே இயைபிலி வியனிலே எனாஅ
சிறப்பே விரூபகம் சமாதானம் எனாஅ
உருவகம் ஏகம் அநேகாங்கும் எனாஅ
முற்றே அவயவம் அவயவி எனாஅ
சொற்றஐம் மூன்றும் மற்றதன் விரியே". - தண்டி. 37
"உவமை ஏது வேற்றுமை விலக்கே
அவநுதி சிலேடைஎன்று அவற்றொடும் வருமே". - தண்டி. 38
"தெற்றுத் தொகைஅவ் விவயம்ஏதுப் பண்பு விரிஉவமை
மற்றுச் சிலேடை சகல மியைபு வரப்புணர்ந்த
முற்றுத் தொகைவிரி தன்னோ டயவவி முந்துறுப்புப்
பெற்றுப் பயில்தத்து வாபனந் தன்னோ டியைபிலியே". - வீ. 160
"தாக்குஞ் சமாதான மேவிதி ரேகம் தடைமொழியாம்
ஊக்கும் உருவகத் தோடொன் றுருவக மேகாங்கமென்
றாக்கு முருவகம் ஐந்நான்கோன் றாம்பிற வந்தனவும்
நீக்கு வனவிட்டுத் தொல்லோ ருரைப்படி நேர்ந்தறியே". - வீ. 161