அணியியல் - உவமையணி்

163 

    "பலபொருள் இயையாப் பண்பின் வருவது
     இயைபிலி உருவகம் என்மனார் புலவர்".                - வீ. உரை. 160 

    "இயைபிலி இயைபுடைத் தின்றிப் போதுவது
     ஆகும் என்மனார் அறிந்திசி னோரே".               - மு. வீ. பொ. 27] 

வியனிலையுருவகம்

     ஊக்கு பொருள் உறுப்பு எலாம் உருவகம் சில நீக்கின செய்யும் வியனிலே
 உருவகம் வருமாறு :

    "செவ்வாய் நகைஅரும்பச் செங்கைத் தளிர்விளங்க
     மைவாள் நெடுங்கண் மதர்த்துஉலவச் - செவ்வி
     நறவுஅலரும் சோலைவாய் நின்றதே, நண்பா!
     குறவர் மடமகளாம் கொம்பு"

 என வரும்.

     ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றுள் சிலவற்றை உருவகம் செய்து
 சிலவற்றை உருவகம் செய்யாது விடுத்து உறுப்பியாகிய அதனை உருவகம் செய்வது
 வியனிலே உருவகமாம். "நண்பா! செவ்வாய் எயிறுகளை அரும்பவும், செங்கையாம்
 தளிர் விளங்கவும், நெடுங்கண் செழித்து உலவவும், குறவர் மடமகளாம் பூங்கொம்பு்
 சோலையில் நின்றது - என்று தலைவன் பாங்கனிடம் தலைவி இயல் இடம் கூறிய
 இப்பாடலில், நகை அரும்புதல் தளிர் விளங்குதல் என்ற உறுப்புப் பற்றிய
 உருவகங்களும், குறவர்மகளாம் கொம்பு என்ற உறுப்பி பற்றிய உருவகமும் அமைய,
 கண் என்ற உறுப்பு உருவகம் செய்யாது விடுக்கப்பட்டவாறு காண்க. பற்கள் முள்ளை
 மொட்டுக்களாகக் குறிப்புருவகமாயின.

    "ஓன்றன்அங் கம்பல வற்றினுள் ளுஞ்சில
     உருவகம் செய்துசெய் யாமலும் உரைப்பது
     வியனிலே என்மனார் மெய்உணர்ந் தோரே."          - மு. வீ. பொ. 28]