அணியியல் - உவமையணி்

167 

 வருந்தாதே" - என்று கூறிய இப்பாடலில், கொங்கையைக் குவடாக உருவகம் செய்து
 மீண்டும் யானையாக உருவகம் செய்ததும், தோள்களைக் குன்றாக உருவகம், செய்து
 மீண்டும் கட்டுத்தறியாக உருவகம் செய்ததும் உருவகஉருவகம் ஆதல் காண்க.

    "உருவகம் தன்னை உருவகம் செய்வது
     உருவக உருவகம் என்மனார் புலவர்."                   - வீ. உரை. 161 

    "ஒருபொருள் உருவகம் செய்துமற்று அப்பொருள்
     மீட்டும் உருவகம் செய்வது உருவக
     உருவகம் என்மனார் உணர்ந்திசி னேரே."            - மு. வீ. பொ. 29] 

ஏகாங்கவுருவகம்

     ஒட்டிய உறுப்பின் ஒன்று உருவகமாகக் கட்டுரை செய்யும் ஏகாங்க உருவகம்
 வருமாறு:

    "காதலனைத் தாஎன்று உலவும் கருநெடுங்கண்;
     ஏதிலனால் என்என்னும் இன்மொழித்தேன்; - மாதர்
     மருண்ட மனம்மகிழ்ச்சி வாள்முகத்து வந்த
     இரண்டினுக்கும், என்செய்கேன் யான்?"

 என வரும்.

     [ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றுள்ளும் ஒன்றனையே உருவகம் செய்து,
 ஏனைய உறுப்புக்களை வாளா கூறுவது ஏகாங்க உருவகமாம்.

     கரிய நெடிய கண்கள் காதலனைக் காண்பதற்குக் கொணர்க என்பன போலக்
 காம மயக்கத்தோடு உலாவுகின்றன. இனிய மொழியாகிய தேன் அயலானோடு என்ன
 தொடர்பு என்று குறிப்பிடுகிறது. கண்டாருக்குக் களிப்புத் தரும் இப்பெண்ணின் ஒளி
 முகத்து அமைந்த இவ்வீருறுப்புக்களின் மாறுபட்ட செயல்களை நோக்கி யான் யாது
 செய்தல் இயலும் - என்று தலைவியும் தோழியும் ஒருங்கிருந்தவழி மறுக்ப்பட்ட
 தலைவன்