170

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     கிழவுதான் விளைக்கும் பைங்கூழ்; கேட்டிரேல் பிணிசெய் பன்மா
     உழவிர்காள்! மேயும்; சீலம் வேலிஉய்த் திடுமின் என்றான்"   - சீவக. 379 

 என இதனுள், பிணிசெய் பன்மா மேயாமற்பொருட்டு எனக் கருமத்தினையும் சீலவேலி
 எனக் கருவியையும் ஒருங்கு உருவகம் செய்தலும் முற்றுஉருவகம் எனவும்,

     [ஒரு பாடலில் கூறப்படும் செய்திகள் முழுவதையும் உருவகம் செய்தலும் முற்று
 உருவகமாம்,

     பவள வாயாகிய வயலில் நித்திலமாகிய விதையை விதைத்தலால் குழவி ஆகிய
 நாறு தோன்ற, காளையாகிய கதிர் வெளிப்பட இறுதியில் கிழத்தன்மையாகிய
 விளைவுதரும் வாழ்க்கையாகிய பயிரை, பிணியாகிய விலங்குகள் மேயாமல்
 சீலமாகிய வேலியிட்டுப் பாதுகாத்தல் வேண்டும் - என்ற இப்பாடலில், வாழ்க்கையைப்
 பயிராக உருவகம் செய்ததற்கு ஏற்ப, அதனோடு தொடர்புடையன யாவும் உருவகம்
 செய்யப்பட்டவாறு.]

ஏகதேசவுருவகம்

    "பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
     இறைவன் அடிசேரா தார்"                                 - குறள் 10 

 எனவும்,

    "உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்,
     வரன் என்னும் வைப்பிற்ஓர் வித்து"                        - குறள் 24 

 எனவும், முறையே கருமமாக கருவியாக ஒன்றனை உருவகம் செய்து ஒன்றனை
 வாளாது கூறுதல் ஏகதேச உருவகம் என்றும் கொள்க.

     [ஒரு பாடலில் ஒரு பகுதியை உருவகம் செய்து மறுபகுதியை உருவகம்
 செய்யாது விடுவது ஏகதேச உருவகமாகும். ஏகதேசம்