உவமை உருவகம் வருமாறு :
"மதுமகிழ்ந்த மாதர் வதனமதியம்,உதய
மதியமே ஒக்கும்; - மதிதளர்வேன்,வெம்மை
தணிய, மதராகமே மிகுக்கும்
செம்மை ஒளியால திகழ்ந்து"
என வரும்.
[முதலில் உருவகம் செய்யப்பட்ட ஒன்றனையே மீண்டும் பிறிது ஒருதிறம் கருதி உவமை செய்தல் உவமை உருவகமாம். அறிவு தளர்ந்த என்னுடைய ஆற்றல் அழியக் களிப்போடு கூடிய காதலால் சிறக்கத் தோன்றும் இப்பெண்ணின் முகமாகிய சந்திரன் தன் இயற்கைப்பெற்றி சற்றுத் திரிந்து, மது உண்ட களிப்பினால் செம்மை மிக்கிருத்தலின் உதய சந்திரனை ஒத்திருக்கிறது - என்று தலைவன் தலைவி வனப்பைப் புகழும இப்பாடலில், வதனமதியம் என்று முதலில் உருவகம் செய்யப்பட்டதனையே மீட்டும் உதய மதியத்தை ஒக்கும் என்று உவமையணிபடச் செய்தவாறு.
"ஒண்தரு பொருளை உருவகம் ஆக்குதல்
உண்டெனின் உவமை உருவகம் ஆகும்". - வீ. உரை 160]
ஏது உருவகம் வருமாறு:
"மாற்றத்தால் கிள்ளை, நடையால் மடஅன்னம்,
தோற்றத்தால் தண்என் சுடர்விளக்கம், - போற்றும்
இயலால் மயில், எம்மை இந்நீர்மை ஆக்கும்
மயல்ஆர் மதர்நெடுங்கண் மான்"
என வரும்.
[ஒரு பொருளைக் காரணம் காட்டி உருவகம் செய்வது ஏது உருவகமாகும்.
"என்னை இந்நிலையினேனாகச் செய்த மயக்கம் தரும் செழித்த நெடுங்கண்களால் மானாகும் இத்தலைவி, மொழியால் |
|
|