கிளி, நடையால் அன்னம், தோற்றத்தால் சந்திரன், சாயலால் மயில்" - என்ற தலைவன் தலைவியைப் புகழ்ந்த இப்பாடலில், அவனைக் கிளியாகவும், அன்னமாகவும், சந்திரனாகவும், மயிலாகவும், மானாகவும் உருவகம் செய்ததற்குக் காரணங்கள் கூறப்பட்டவாறு காண்க.
"மரபுடைப் பொருளைமற்று அதுவால் அதுஎனும்
உரைபெறின் ஏதுஉரு வகமாம் என்ப". - வீ. உரை. 160]
வேற்றுமை உருவகம் வருமாறு:
"வையம் புரக்குமால், மன்னவ! நின் கைக்காரும்,
பொய்இன்றி வானில் பொழிகாரும்; - கையாம்
இதுகார்க்கும் இல்லை பருவம்; இடிக்கும் ஒருகார்ப்
பருவம் உண்டு"
என வரும்.
[உருவகம் செய்யப்பட்ட பொருளை, உருவக உறுப்பாகிய உவமையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை உருவகமாம். அரசே! உன் கைகளாகிய கார்மேகமும் மழைபொழியும் கார்மேகமும் உலகத்தைக் காக்கும் எனினும், உன் இரு கைகளாகிய மேகத்திற்குப் பருவ வரையறை இல்லை; ஆனால் இடித்து மழைபொழியும் கார்மேகத்திற்கு மழைபெய்யும் பருவம் உண்டு - என்னும் இப்பாடலில், கைகளைக் கார்மேகமாக உருவகம் செய்து, பருவ வரையறை இன்மை கூறி வேறு படுத்தவாறு காண்க.இது விதிரேக உருவகம் எனவும் பெயர் பெறும்.
"ஏற்றிய பொருள்கள் இரண்டினும் இயல்பாம
வேற்றுமை கூறுவது விதிரே கம்மே". - வீ. உரை. 161]
விலக்கு உருவகம் வருமாறு:
"வல்லி வதன மதிக்கு மதித்தன்மை
இல்லை; உளதேல், இரவுஅன்றி, -எல்லை |
|
|