180

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 புலவரையும் குறிக்கும் நிலையில் அமைந்துள்ள வில் ஏர் உழவர், சொல் ஏர் உழவர்
 என்பன ஏது உருவகத்தின்பாற் படுத்தப்பட்டன.]

    "மலையில் பயிலா மடமஞ்ஞை, வாரி
     அலையில் பிறவா அமுதம், - விலையிட்டு
     அளவாத நித்திலம், ஆராத தேறல்,
     வளவாள் மதர்நெடுங்கண் மான்"

 என்பது விலக்குஉருவகத்தின்பாற்படும் எனவும்,

     [உருவகம் செய்து உருவகம் செய்யப்பட்ட உவமையின் பண்பினை அடியோடு
 விலக்காமல் அதன் பண்புகளுள் ஒன்றனையே விலக்கி உரைப்பது நேரே விலக்கு
 உருவகம் ஆகாது, விலக்கு உருவகத்தின் பாற்படும். இம்மதர் நெடுங்கண்
 மான்போல்வாள் மலையில் பயிலாத மயில்; கடலில் பிறவா அமுதம், விலையிட
 முடியாத முத்து, உண்ணத் தெவிட்டாத தேன் - என்னும் இப்பாடலில், தலைவிக்கு
 மயில் அமுதம் முத்து தேன் என்பனவற்றின் தன்மை முழுதும் இருத்தலை உருவகம்
 செய்து முறையே மயிலுக்குரிய மலையிலிருத்தல், அமுதத்திற்குரிய கடலில் பிறத்தல்,
 முத்துக்குரிய விலை மதிப்பிடப்படல், தேனுக்குரிய உண்ணத் தெவிட்டல் ஆகிய
 ஒருபுடைப் பண்புகளையே விலக்கியுள்ளமை காண்க.]

    "முத்துக் கோத்தன்ன முறுவல், முறுவலே
     ஒத்துஅரும்பு முல்லைக் கொடிமருங்குல், - மற்றுஅதன்மேல்
     விண்அளிக்கும் கார்போல் விரைக்கூந்தல், மெல்லியலார்
     தண்ணளிக்கும் உண்டோ தரம்?"

 என்னும் இப்வொப்புமைஉவமை விகாரஉவமத்தின் பாற்படும் எனவும்,

     [கூறுபடும் உவமையின் கொள்கை பிறிதாக வேறுபடுத்து இசைப்பது விகார
 உவமையாம். முதலில் உபமேயமாகக்