182

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "ஈர்ந்துநிலம் தோயும் இருப்பிடித் தடக்கையின்
     சேர்ந்துஉடன் செறிந்த குறங்கின், குறங்கென
     மால்வரை ஒழுகிய வாழை, வாழைப்
     பூஎனப் பொலிந்த ஓதி, ஓதியின்
     நளிச்சினை வேங்கை நாள்மலர், நாள்மலர்
     களிச்சுரும்பு அரற்றும் சுணங்கு, சுணங்குபிதிர்ந்து
     யாணர்க் கோங்கின் விரைமுகை, முகைஎனப்
     பூண்அகத்து ஓடுங்கிய வெம்முலை, வெம்முலை
     எனவண் தோட்டுப் பெண்ணை, பெண்ணை
     வளர்த்த நுங்கின் செறிதரும் எயிற்றின்"               - சிறுபாண். 19-28 

 என்னும் இச்சந்தான உவமை மாலை உவமையின் பாற்படும் எனவும்.

     [சந்தான உவமையாவது ஒன்றோடொன்று தொடர்புடைய பல பொருள்களை
 வெவ்வேறு பொருள்களுக்கு உவமையாகக் கூறுவது. மாலை உவமையாவது
 ஒன்றோடொன்று தொடர்புடைய பல பொருள்களை ஒரு பொருளுக்கு உவமையாகக்
 கூறுவது.

     பெண் யானையின் துதிக்கை போன்ற குறங்கு, அக்குறங்குகளைப் போன்ற
 வாழை, வாழைப் பூவைப்போன்ற மயிர்முடி, அம்மயிர் முடிபோன்ற கரிய செறிந்த
 கிளைகளை உடைய வேங்கையின் பூக்கள், அவ்வேங்கை மலர்கள் என்று கருதி
 வண்டுகள் மொய்த்தற்கு வரும் தேமல்கள், தேமலை ஒத்த கோங்கின் முகை,
 அம்முகையை ஒத்த முலைகள், அம்முலைகளை ஒத்த காய்களை உடைய பனைமரம்,
 அப்பனைமரத்தின் நுங்கு போலச் சுவைதரும் பற்கள் - என ஒன்றோடொன்று
 தொடர்புடைய பல உவமைகள் பல பொருள்களுக்கு உவமையாய்ச் சந்தான
 உவமையாயின. அவை யாவும் ஒரு பெண்ணின் உறுப்புக்களுக்கே உவமையாக வரும்
 ஒப்பமை குறித்து மாலை உவமையின்பாற்பட்டன,]

    "பாரி பாரி என்றுபல ஏத்தி
     ஓருவற் புகழ்வர் செந்நாப் புலவர்;