அணியியல் - உவமையும் உருவகமும்

183 

     பாரி ஒருவனும் அல்லன் ;
     மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப்பதுமே".                   - புறநா. 107 

 என்பது விலக்குஉவமையின்பாற்படும் எனவும அமைத்துக்கொள்க. இன்னும்
 பிறவாற்றான் வருவன உளவேல், அவற்றையும் அமையுமாறு அறிந்து
 அமைத்துக்கொள்க.

     [பாரி பாரி என்று ஒருவனையே உலகத்தவர் பலவாகப் புகழ்கின்றனர். உலகத்தை
 பாரி மாத்திரம் புரப்பவன் அல்லன். உலகினை மாரியும் காக்கின்றது - என்னும்
 இப்பாடலில், புலவர் போற்றுதல் பாரி ஒருவனுக்கே அடாது, மாரிக்கும் வேண்டும்
 என்ற கருத்து, புலவர் போற்றுதலுக்குப் பாரியை அடியோடு விலக்காது மாரியையும்
 இணைத்தலின், இது நேரே விலக்குவமை ஆகாது விலக்குவமையின் பாற்பட்டது.]

    "அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே."              - தொல். பொ. 311 

 என்ப ஆகலின், இவற்றுள் ஒப்புஉவமை,

    "முத்துக் கோத்தன்ன முறுவல், முறுவலே
     

 என உவமைக்கு உவமையாய் அடுக்கிவருதல் வரையப்படும் எனின், படாது;

    "வெண்திங்கள் போன்றுஉளது வெண்சங்கம்,வெண்சங்கின்
     வண்டுஇயங்கு தாழை வளர்தோடு"

 எனறாற்போலாது பயப்பாடு உண்மையின் என்பது.

     [ஒன்றனை முதலில் உபமேயமாக்கிப் பின்னர் அதனையே உபமானமாக்கிச்
 செல்வதால் மயக்கம் ஏற்படுதலின் அந்நெறி கூடாது என விலக்கப்பட்டது. ஆனால்
 நிறம் பற்றி முத்தினுக்கு உபமேயமாகிய பற்களை வடிவு பற்றி முல்லை
 மொட்டுக்களுக்கு உவமையாக்குதல் பொருட் சிறப்புடைமையின் ஏற்கும் என்று
 கொள்ளப்பட்டது.