அணியியல் - தீவக அணி

185 

 என்றாற்போல அன்றி,

    "கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்,
     இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை,
     எல்லி வருநர் களவிற்கு,
     நல்லை அல்லை நெடுவெண் நிலவே!"                      - குறுந். 47 

 என வேறுபடவருதலும் அமைத்துக் கொள்க. பிறவும் அன்ன                 (26) 

     [மயில் கழுத்துப் போலக் காயா மலர்ந்தன. மன்னன் பிறந்த நாளிலே
 அவன் திருவடிகளிலே பணிந்த முடிமன்னர்போலக் கோங்கங்கள் பலவும் பூத்தன.
 அவர் பின் தலைப்பாகை தாங்கிச் சட்டை அணிந்து செல்பவர் போல மரவங்கள்
 பூத்தன - என்னும் இப்பாடலில், நிறம் வடிவு ஆகிய பண்புபற்றிய உவமங்கள்
 வந்துள்ளன.

     நிலவே! வேங்கைப்பூ விழுந்த சிறிய பாறை புலிக்குட்டி போலக் காட்சி வழங்கும்
 காட்டுவழியில் தலைவன் இரவுக்குறி கருதி வருங்கால் ஒளிவீசும் நீ நல்லை அல்லை -
 என்ற பாடலில், புலிக்குருளை என்ற ஒரே உபமானத்திற்கு வேங்கைப்பூ விழுந்த
 பாறை ஆகிய இரண்டு பொருள்கள் இணைந்து உபமேயமாகியவாறு காண்க;
 "இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே" (தொல். பொ. 297) என்ற நூற்பாவில்
 உம்மையால் ஒற்றைக் கிளவியும் இரட்டை வழித்தே என்பது ஓத்தாகலின்.]       26

தீவக அணி - இலக்கணம்

 646. குணம்தொழில் சாதி பொருள்குறித்து ஒருசொல்
      ஒருவயின் நின்று பலவயின் பொருள்தரின்
      தீவகம் ஆகும்; அதுவே செய்யுளின்
      மூவிடத்து இயலும் என்மனார் புலவர்.

 இது நிறுத்தமுறையானே தீவகம் ஆமாறு கூறுகின்றது.