186

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இ-ள் :   குணம் முதலிய நான்கனுள் யாதானும் ஒன்றனைக் குறித்து ஒருசொல்
 ஓரிடத்தின் நின்று பல இடத்து நின்ற சொற்களோடு பொருந்தி அப்பொருளை
 விளக்குமாயின், மேற்கூறிய தீவகம் என்னும் அலங்காரமாம். இது செய்யுளின்கண்
 முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் புலப்படும் என்று கூறுவர் ஆசிரியர்
 என்றவாறு.

     எனவே, முதல் நிலைத் தீவகம் இடைநிலைத் தீவகம் கடைநிலைத் தீவகம்
 என மூன்றாம். அவை குணம் தொழில் சாதி பொருள் என்பனவற்றோடு உறழப்
 பன்னிரண்டாம்.

     (இவ்வணி விளக்கணி எனவும் கூறப்படும்.)

ஒத்த நூற்பாக்கள்

முழுவதும் (சிறிது திரிபுடன்) தண்டி 40.

    "தொழில்குணம் சாதி பொருள்எனும் இவற்றோடு
     மொழிபுணர் செய்யுளின் முதலிடை கடைநின்று
     ஆங்கதன் பலபுடை அடைபொருள் விளக்கும்
     பாங்குறு தீபகம் பன்னிரு பாற்றே."                           - மா.160 

    "குணம்தொழில் ஆக்கம் குலம்குறித்து ஒருசொல்
     ஒருவயின் நின்று பலவயின் பொருள்தரின்
     தீவகம் மூவிடத்து இயலும் என்ப."                    - மு. வீ. பொ. 61 

    "வருணியா வருணியம் வாய்ப்பஓர இயல்பின்
     முடிவது விளக்கென மொழிந்தனர் புலவர்."                     -ச. 37 

    "வினைமுதற் சேற்ற வினைகளை முறைப்பட்
     விளம்ப வினைமுதல் விளக்கணி யாமே."                       -ச. 82 

    "உன்னும் புனைவுளிக் கும்புனை வில்லிக்கு மோர்தருமத்
     தின்முடி வாதல் விளக்கணி                                - குவ. 37